முகப்பரு வருவதற்கு இதான் காரணமா??
Addon on 11-01-2017

இளைய சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானதாக முகப்பரு உள்ளது. அதுவும் சிலருக்கு அளவுக்கு அதிகமான முகப்பருக்கள் நீண்ட காலம் அப்படியே இருக்கும். பொதுவாக இது போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் ஏன் முகப்பரு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  
 
பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
 
 
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். இது எப்படி நடக்கிறது? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது. 
 
சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது.


Tags: skin care, beauty tips, natural beauty


FOLLOW US ON
    

 
contador usuarios online