உங்கள் ஆயுட்காலத்தை குறைக்கும் தீய பழக்கவழக்கங்கள்..
Addon on 17-01-2017

உலகில் பிறக்கும் போது அனைவரும் ஆரோக்கியத்துடனே இருப்பர், எனினும் காலப்போக்கில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் ஆயுட்காலத்தை குறைக்கிறது. இங்கு உங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் சில தீய பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
இறைச்சிக்காக மிருகங்களைக் கொல்வது என்பது மிகப்பெரிய பாவச் செயல் என்பதால் அசைவ உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் குறையும். இதேபோல் இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, வாழ்நாளையும் குறைக்குமாம். 
 
 
சூரிய உதயத்திற்கு பிறகு தூங்குகிறாரோ, அவர் அடிக்கடி உடல்நல பிரச்சனையால் அவஸ்தப்பட வைத்து, வாழ்நாளின் அளவைக் குறைக்கும் என கூறப்படுகிறது. ஆண்களில் யார் ஒருவர் உடலுறவில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்கள் உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்ட ஆண்களை விட வாழ்நாள் குறைவாக கொண்டிருப்பார்களாம். 
 
ஒருவர் தங்களின் வாழ்நாளில் பலமுறை டென்சன் அடைந்திருப்போம். இப்படி அடிக்கடி தேவையில்லாமல் டென்சன் கொண்டால், அது ஒருவரது வாழ்நாளைக் குறைக்கும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டால், முடிந்த அளவு சீக்கிரம் வீடு திரும்பி விட வேண்டும். சுடுகாட்டில் மாசடைந்த காற்று இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். 
 
மாலை நேரத்தில் தூங்கினாலும், ஆயுர்காலம் குறைவதாக கூறப்படுகிறது. மேலும் வாஸ்துப் படி, மாலையில் தூங்கினால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.


Tags: life, facts, health


FOLLOW US ON
    

 
contador usuarios online