இந்தியாவின் சில அதிபயங்கர இடங்கள்.!
Addon on 04-01-2017

பேய், பிசாசு, பில்லி, சூனியம் என நம்மில் பலரை பயமுறுத்தவும், சிலருக்கு வேடிக்கையாகவும் உள்ளது. இது போன்ற அமானுடங்களில் நம்பிக்கை இருப்பது அவர்அவர் விருப்பத்தை  சார்ந்தது. 
 
இந்தியா போன்ற கலாச்சாரம் நிறைந்த நாடுகளில் பல்வேறு பகுதிகளில் அமானுடம் சார்ந்த நம்பிக்கை பரவலாக நமபப்படுகிறது. இங்கு இந்தியாவின் சில அமானுடம் நிறைந்த பகுதிகள் மற்றும் இடங்களை பற்றி இங்கு பார்ப்போம்.. 
 
 
பாம்பன் தீவில் இருக்கும் தனுஷ்கோடி, இன்று வரை மக்கள் மிகவும் ஆர்வமாக சென்று பார்க்க விரும்பும் இடம். 1964-ம் ஆண்டு ஓர் புயலில் சிக்கி சின்னாபின்னமாகிப் போன இடம். மொத்தமாக அழிவை சந்தித்தது தனிஷ்கோடி. தனுஷ்கோடியில் இருக்கும் பல பகுதிகளில் பேய்கள் இருக்கின்றன என்ற அச்சம் இருப்பதாக அங்கு சென்றுவரும் சுற்றுலா பயணிகளே கூறியுள்ளனர்.
 
முகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக திகழ்ந்த இடம் பதேபூர் சிக்ரி. இந்தியாவில் இருக்கும் திகிலான இடங்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகிறது.
 
மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஓர் கோட்டை நகரம் தான் இந்த மண்டு. கி.மு 555 ஆம் ஆண்டுகள் முதலே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. இப்போது பெரியளவில் இங்கு யாரும் சென்றுவருவதில்லை. மேலும் இதன் பழமையான தோற்றமும், கோட்டை உருவங்களும் திகிலான இடம் என்ற அடைமொழியை தந்துவிட்டது.
 
முன்பு இதுதான் கோவாவின் முக்கிய நகரப்பகுதியாக இருந்தது. 17-ம் நூற்றாண்டிலேயே இது பெருமளவில் கைவிடப்பட்ட பகுதியாக மாறிவிட்டது. இதற்கு காரணம் இங்கு பரவிய மலேரியா மற்றும் காலரா போன்ற நோய்கள் தான் என்று கூறப்படுகிறது.
 
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஆளுமை பகுதியாக இருந்து வந்தது இந்த ராஸ் தீவு. 1941-ம் ஆண்டு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இந்த தீவை அழித்துவிட்டது. இப்போது திகில் நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.


Tags: ghost, facts, india


FOLLOW US ON
    

 
contador usuarios online