பெண்களை பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்.!!
Addon on 17-01-2017

பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்பர். இங்கு வழங்கப்பட்டுள்ள சில தகவல்கள் இதனை நிரூபிக்கும் வகையில் இருக்கும். பெண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை பற்றி இங்கு பார்ப்போம்..
 
சராசரியாக பெண்கள் ஒரு நாளுக்கு ஒன்பது முறை தங்களது தோற்றம் எப்படி இருக்கிறது என சரிபார்த்துக் கொள்கின்றனர். மேலும் ஒரே சமயத்தில் பல்வேறு பணிகளை  மேற்கொள்வதில் ஆண்களை விட பெண்கள் சிறப்பானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  
 
உலகளவில் இது இன்றும் நடைபெற்று வருகிறது என்றாலும் அமெரிக்காவில் ஆறு பெண்களில் ஒருவர் அன்றாடம் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 40 சதவிகிதம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கருத்தரிக்கின்றனர். 
 
ஆப்ரிக்காவின் வடமேற்கு பகுதி மக்கள் நைஜீர் என அழைக்கின்றனர். இந்த பகுதி பெண்களின் சராசரி குழந்தைகள் எண்ணிக்கை 7 ஆகும். 80% பெண்கள் அவர்களுக்கு பொருந்தாத, சரியில்லாத அளவிலான மேலாடையை தான் அணிகிறார்களாம். 
 
 
ஜமைக்கா, கொலம்பியா, செயின்ட் லூசியா போன்ற நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வியாபாரங்களை கவனிக்கும் தலைவர் பதவியில் இருக்கின்றனர். அமெரிக்காவின் மொத்த தொழிலதிபர்களில் 30% பேர் பெண்கள். இவர்கள் தங்களுக்கென சொந்தமாக தொழில் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சராசரியாக ஐரோப்பிய பெண்கள் 19 ஜோடி காலணிகள் வைத்திருக்கிறார்களாம். ஆனால், இதில் வெறும் 7 ஜோடியை தான் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவின் ஆண்களை விட பெண்கள் ஒன்பது மில்லியன் அளவு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனர். 
 
ஷாக் ஆகாதீங்க, உலகில் உள்ள மொத்த பெண்களில் வெறும் இரண்டு சதவீத பெண்கள் தான் தங்களை தாங்களே அழகு என பறைசாற்றிக் கொள்கின்றார்களாம். அமெரிக்காவில் 40,000 பெண்களுக்கு ஆண்களின் விந்து என்றால் அழற்சியாம். உடலுறவில் ஈடுபட்ட 5-8 நாட்களுக்கு பிறகு கூட கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.


Tags: facts, women, lifestyle


FOLLOW US ON
    

 
contador usuarios online