கர்ப்ப கால சர்க்கரை நோய்: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்..
Addon on 05-01-2017

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் கர்ப்ப கால சர்க்கரை நோய். பிரசவத்திற்கு பின் இரத்த சர்க்கரை அளவு பழைய நிலைக்கு திரும்பிவிடும். இருப்பினும் கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
 
இதோடு, வயிற்றில் வளரும் குழந்தையையும் பெரிதாக தாக்கும். இங்கு அந்த கர்ப்ப கால சர்க்கரை நோய் பற்றி இதுவரை உங்களிடம் யாரும் தெளிவாக கூறாத விஷயங்களை பார்க்கலாம்.
 
 
கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு சிகிக்கை அளிக்காவிட்டால், அதனால் வயிற்றில் வளரும் குழந்தை அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் பிறக்கும். ஒருவேளை கர்ப்பிணியின் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால், அதனால் குழந்தை இறக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக கர்ப்ப கால சர்க்கரை நோய் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.
 
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருக்கும் தாய்க்கு பிறந்த குழந்தை உடல் பருமனால் அவஸ்தைப்படுவதோடு, சர்க்கரை நோயாலும் கஷ்டப்படும்.
 
கர்ப்ப கால சர்க்கரை நோய் கொண்டிருந்த பெண்களுக்கு, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் இந்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதி மட்டும் பெரிதாக இருக்கும்.
 
கர்ப்ப கால சர்க்கரை நோயால் கஷ்டப்பட் பெண்கள், டைப்-2 சர்க்கரை நோயாலும் அவஸ்தைப்படக்கூடும். கடந்த 20 வருடங்களில் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுள் பாதி பேர் டைப்-2 சர்க்கரை நோயாலும் அவஸ்தைப்பட்டுள்ளனர்.
 
கர்ப்ப கால சர்க்கரை நோய் சீரம் கொழுப்பு அளவுகளை பாதித்து, உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி, பல்வேறு இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
 
முதல் கர்ப்பத்தில் சர்க்கரை நோயை சந்தித்தால், மீண்டும் கருவுறும் போதும் கர்ப்ப கால சர்க்கரை நோயால் அவஸ்தைப்படக்கூடும்.
 


Tags: pregnancy, child care, diabetes


FOLLOW US ON
    

 
contador usuarios online