சுவையான சில்லி கார்லிக் நூடுல்ஸ்
Addon on 10-01-2017

இன்றைய குழந்தைகளுக்கு வித்தியாசமாக தோன்றும் வெளிநாட்டு உணவுகளையே அதிகம் பிடிக்கிறது. இங்கு சீன நூடுல்ஸ் வகையினை வித்தியாசமாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..  
 
 
தேவையான பொருட்கள் : 
 
நூடுல்ஸ் - அரை கப், 
வெங்காயம் - 2
கேரட் - 50 கிராம்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், 
கொத்தமல்லி - சிறிதளவு, 
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 
 
* கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும். 
 
* கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும். 
 
* எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.


Tags: recipe, veg noodles, chinese recipe


FOLLOW US ON
    

 
contador usuarios online