இனிப்பான கேரட் ஜவ்வரிசி பாயசம்..
Addon on 03-01-2017

வீட்டிலேயே எளிமையாக, எளிதில் செய்ய கூடிய இனிப்பு வகையாக பாயசம் உள்ளது. சேமியா, பருப்பு என வீட்டில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை கொண்டு பாயசம் செய்ய முடியும். அந்த வகையில் கேரட் மற்றும் ஜவ்வரிசி கொண்டு செய்யக் கூடிய பாயசத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..
 
தேவையான பொருட்கள் :
 
கேரட் (பெரியது) - 1
ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
சர்க்கரை - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - 20
பாதாம் - 15
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
 
 
செய்முறை :
 
* ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* 10 முந்திரி பருப்பை சிறிது பாலில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
 
* கேரட்டைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.
 
* ஊறிய ஜவ்வரிசியைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி மினுமினுப்பாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
 
* மிக்ஸியில், வெந்த கேரட்டையும், ஊற வைத்துள்ள முந்திரியையும் ஊற வைத்த பாலுடன் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
 
* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட் விழுது, வெந்த ஜவ்வரிசி, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 
* மீதமுள்ள முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். 
 
* கடைசியில் பாதாம், ஏலக்காய்த்தூளைத் தூவிக் கலந்து, இறக்கி வைக்கவும். சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம். 
 
* தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெடி.


Tags: payasam, sweet, recipe


FOLLOW US ON
    

 
contador usuarios online