உடலுறவு சார்ந்த அறிவியல் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Addon on 07-01-2017

உடலுறவு என்பது இயற்கையானது என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் உடலுறவு சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உடலுறவு என்பது விஞ்ஞான பூர்வமானது என்பது தெரியவந்துள்ளது. இங்கு உடலுறவு குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சியூட்டும் விஞ்ஞான தகவல்களை இங்கு பார்ப்போம்..
 
 
நீங்கள் படுக்கையில் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உங்கள் மருத்துவரிடம் சென்று சோதித்து கொள்ளுங்கள். கேட்பதற்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது விறைப்பு செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மேலும், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்காக மருந்து உட்கொள்பவர்கள் நாளடைவில் சிறந்த செக்ஸ் அனுபவத்தைப் பெறலாம்.
 
உடலுறவு அளவிற்கு தங்கள் உறவை திருப்திப்படுத்த உடலுறவிற்கு பின் கட்டித் தழுவுவது மிகவும் முக்கியம் என்பதை டொரோண்டோ பல்கலைகழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த திருப்திக்கு காரணமாக இருப்பது உடலில் இருந்து ஆக்சிடாக்சின் வெளியேறுவதாலேயே. ஒரு ஜோடி கட்டித் தழுவிக் கொள்ளும் போது இது உற்பத்தியாகிறது.
 
செக்ஸைப் பற்றி பொதுவாக கூறப்படுபவை இது. ஆனால் இதனை அரிதாகவே மக்கள் நம்பி வந்தனர். ஆனால் இது உண்மை என நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. க்யூபெக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வின் படி, படுக்கைகளில் ஒரு மணிநேரம் பிஸியாக செயல்பட்டால், 30 நிமிடம் ஜாக்கிங் செய்யும் அளவிற்கு கலோரிகள் குறையுமாம். இந்த ஆய்வின் படி, உடலுறவின் போது ஆண்கள் ஒரு நிமிடத்திற்கு 4.2 கலோரிகளை குறைக்கின்றனர். பெண்களோ ஒரு நிமிடத்திற்கு 3.1 கலோரிகளை குறைக்கின்றனர். மொத்தத்தில், ஒரு முறை உறவு கொள்ளும் போது ஒரு ஆண் 101 கலோரிகளையும், ஒரு பெண் 69 கலோரிகளையும், குறைக்கிறார்கள். 
 
சிலருக்கு அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என தோன்றும். ஆனால் இது அளவுக்கு அதிகமாக செக்ஸ் வெறியை கொண்டிருக்கும் நிம்ஃபோமானியாக் பிரச்சனை கிடையாது. ஆனால் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆய்வு ஒன்றின் படி, தனிப்பட்ட நபரின் மூளை, அவரை பல்வேறு நபர்களுடன் உடலுறவு வைக்கச் சொல்லி தூண்டுமாம்.


Tags: relationship, sex, intercourse


FOLLOW US ON
    

 
contador usuarios online