முதல்முறை உடலுறவு: உங்களை தயார்படுத்தி கொள்ள சில டிப்ஸ்.!
Addon on 05-01-2017

உடலுறவு குறித்து முறையான கல்வி இல்லாமல், அதனை சரியாக கையாள முடியாமல் போனால் முதல் உடலுறவு அனுபவம் மோசமானதாக அமைந்து விடும். முதல் முறை உறவு கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள, மனதில் வைத்து கொள்ள வேண்டியவை பற்றி இங்கு பார்ப்போம்..
 
முதல் முறை உடலுறவு என்றால் பலரும் அதிக உணர்ச்சி வயப்படுவார்கள். அதோடு சேர்ந்து மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த ஆர்வத்தை சந்தோஷமானதாக மாற்ற வேண்டும் தான், ஆனால் அதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். கர்ப்பமாகாமல் இருக்கவும் பாலியல் ரீதியான நோயால் அவதிப்படாமலும் இருக்கவும் ஆணுறைகளை பயன்படுத்துங்கள். 
 
 
முதல் முறை என்பது அதிசய வைக்கும் வகையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என பலரும் விரும்பினாலும், எல்லோருக்கும் அப்படி நடப்பதில்லை. சிறப்பான உடலுறவில் ஈடுபடுவதை கற்றுக் கொள்வது ஒரு கலையாகும். காலப்போக்கில் தான் அந்த கலையை கற்றுக் கொள்ள முடியும். இதனால் அதிகமான எதிர்ப்பார்ப்புகள் வேண்டாம், இது உங்களுக்கு அதிருப்தியை அளித்து உங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தும்.
 
நீங்கள் அதிக உற்சாகத்துடன் குதூகலமாக இருந்தாலும் கூட, உடனே களத்தில் பாய்ந்து விடாதீர்கள். நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கலவிக்கு முந்தைய காம விளையாட்டை நீடித்து உங்கள் துணையை ஆசுவாசப்படுத்துங்கள். முதல் முறை எனும் போது, கலவிக்கு முந்தைய காம விளையாட்டில் நீங்கள் எந்தளவிற்கு ஈடுபடுகிறீர்களோ அந்தளவிற்கு இந்த அனுபவம் சிறப்பாக விளங்கும்.
 
உடலுறவுக்கு முன் காம பரவச நிலையின் உச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் முதல் முறை உடலுறவு வலி மிகுந்ததாகவும் அவலமானதாகவும் அமைந்துவிடும். 
 
தங்களின் துணையை திருப்திப்படுத்தும் எண்ணத்தில் தாங்கள் திருப்தி அடைந்து விட்டதாக பலரும் பொய்யாக நடிக்க கூடும். இவ்வகை செயல்கள் மனக்கசப்பிற்கு விதை போடும். இது உங்கள் உறவையே பாதிக்கும். அதனால் பொய்யாக நடிக்காதீர்கள். அதுவும் முதல் முறை என்றால் இந்த விஷயத்தில் பொய் கூடவே கூடாது.
 
புணர்ச்சி பரவச நிலை உங்களை சுகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றாலும் கூட, அது இல்லாமல் கூட பாலியல் அனுபவத்தை பெறலாம். புணர்ச்சி பரவச நிலையை எதிர்ப்பார்க்காதீர்கள். அது நடந்தால் நல்லது தான். அப்படி இல்லையென்றால் போகிற போக்கில் போகட்டும். அந்த அனுபவத்தை மகிழ்ந்து அனுபவித்திடுங்கள்.
 
முதல் முறை உடலுறவு என்றால் சற்று வலிக்கலாம். அதற்காக நீங்கள் ஒரு நல்ல துணை கிடையாது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஆனால் நீங்கள் கஷ்டமாக உணர்ந்தால், அதை வெளிப்படையாக பேசத் தயங்காதீர்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான துணையை நீங்கள் கொண்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.


Tags: intercourse, sex, relationship


FOLLOW US ON
    

 
contador usuarios online